The post Which idols of god should not be placed in the puja room? appeared first on My Blog.
]]>பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும் எந்த உருவங்களை வைக்க கூடாது என சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அதை முறைப்படி பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும். சனீஸ்வர பகவானின் படங்களை இல்லங்களிலோ அல்லது பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து எப்போதும் பூஜை செய்யக் கூடாது. நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்க கூடாது. கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவணம் கட்டிய முருக பெருமானின் படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது.
கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது. தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது.
ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள உருவம், தவம் செய்வது போன்ற மற்றும் தலை விரி கோலங்களில் உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது. இது மட்டுமில்லாமல் வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.
The post Which idols of god should not be placed in the puja room? appeared first on My Blog.
]]>